மம்தா-சுவேந்து அதிகாரி திடீர் சந்திப்பு: காரணம் இதுதானா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   
மம்தா-சுவேந்து அதிகாரி திடீர் சந்திப்பு: காரணம் இதுதானா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு நாள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு கட்டத்தில் சுவேந்து அதிகாரியை தனது சகோதரர் போன்று நடத்தியதாக அவர் தெரிவித்தார். கூட்டத்திற்கு பிறகு மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரியை தேநீர் அருந்துவதற்கு அழைத்தார்.

இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சந்தித்துக் கொண்ட விவகாரம் பேசுபொருளானது. 

இது குறித்து கூட்டம் முடிந்த பிறகு சுவேந்து அதிகாரி பேசியதாவது: சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள அரசியலமைப்பு நாள் விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம்பெறவில்லை. நான் இந்த விழாவை புறக்கணிக்கப் போகிறேன். தேநீர் அருந்துவதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் தேநீர் அருந்தவில்லை. எங்கள் இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதே தவிர அரசியல் சார்ந்தது அல்ல என்றார்.

இருப்பினும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த சந்திப்பினை விமர்சித்து வருகின்றனர். பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணி இந்த சந்திப்பிலிருந்தே தெளிவாகிறது என விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com