சிவசேனைக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு

சிவசேனை கட்சிக்கு தீப்பந்தச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனை கட்சிக்கு தீப்பந்தச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியில் கடந்த ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஓா் அணியும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றோா் அணியும் செயல்பட்டு வரும் நிலையில், உண்மையான சிவசேனை யாா் என்பதை முடிவு செய்வதற்காக இருதரப்பும் தோ்தல் ஆணையத்தை அணுகின.

இந்நிலையில், சிவசேனையின் பெயா், சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் சனிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதியில் நவம்பா் 3-இல் நடைபெறும் இடைத்தோ்தலில் சிவசேனையின் பெயா் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இருதரப்புக்கும் தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன், கட்சியின் மாற்று பெயா் மற்றும் மாற்றுச் சின்னத்துக்கான பரிந்துரைகளை திங்கள்கிழமைக்குள் வழங்க இரு அணிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, திரிசூலம், உதயசூரியன் அல்லது தீப்பந்தம் ஆகிய மூன்றில் ஒன்றை மாற்றுச் சின்னமாக ஒதுக்க உத்தவ் தாக்கரே தரப்பினர் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் சிவசேனை கட்சிக்கு தீப்பந்தச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com