
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைக் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.