புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற பிரதமர் அனுமதிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 10:56 am

DIN


2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார். கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

“அக்டோபர் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே 5 ஆண்டுகள் பெங்கால் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருந்துள்ளேன். லோதா கமிட்டி விதிகளின்படி, மேலும் 4 ஆண்டுகள் பதவியில் தொடர முடியுமென” அவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில். இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: 

கங்குலி நமது நாட்டின் பெருமிதம். இதை இந்திய நாட்டின் குடிமக்கள் சார்பாக நான் சொல்கிறேன். அவர் பிசிசிஐ தலைவராக சிறப்பாக நிர்வகித்துள்ளார். அவரை தவறான முறையில் வெளியேற்றுவது சரியில்லை. இந்த இழப்பீட்டிற்காக அவரை ஐசிசிக்கு அனுப்ப வேண்டும். 

கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற அனுமதிக்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கிறேன். அவர் அரசியல் தலைவர் கிடையாது. அதனால் இதை இதை அரசியாலாக கருதாமல் கிரிக்கெட்டுக்காக, விளையாட்டுக்காக என கருதுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.