ஒரு முறை நெருங்கி வந்து விடியோவை உற்றுப் பார்ப்பீர்கள்.. என்ன நடக்கிறது என்று
ஒரு முறை நெருங்கி வந்து விடியோவை உற்றுப் பார்ப்பீர்கள்.. என்ன நடக்கிறது என்று

ஒரு முறை நெருங்கி வந்து விடியோவை உற்றுப் பார்ப்பீர்கள்.. என்ன நடக்கிறது என்று

தற்போது சிறு சிறு பேச்சும் சிரிப்பும் கூட விடியோக்களாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திடீரென ஒரு விடியோ பலராலும் விரும்பப்பட்டு சக்கைப்போடு போடுகிறது.


தற்போது சிறு சிறு பேச்சும் சிரிப்பும் கூட விடியோக்களாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திடீரென ஒரு விடியோ பலராலும் விரும்பப்பட்டு சக்கைப்போடு போடுகிறது.

பலரும் இணையத்தில் தங்களது நேரத்தைப் போக்க இந்த விடியோக்கள்தான் காரணமாக இருக்கின்றன. அவை பல வகைகளில் உள்ளன. குழந்தைகளின் செல்ல சண்டை முதல் இளம் தலைமுறையினரின் கலாட்டாக்கள் என எண்ணிலடங்காதவை.

சிலரின் அபரீத திறமைகள் கூட இந்த விடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றன என்பதுதான் இதன் வரப்பிரசாதம். அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமே இதுவரை தெரிந்து வந்த திறமைகள் அந்தப் பகுதி மக்களின் பெருமையாக மாறுவதற்கும் இந்த விடியோக்கள் காரணமாகிவிடுகின்றன.

அந்த வகையில்தான், இந்த விடியோவும் அமைந்துள்ளது. பலரும் காய்கறிகள் பழங்களை வாகனங்களில் ஏற்ற பல தொழில்நுட்பங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இங்கே ஒரு இளைஞர் தனது அபராத திறமையால், நின்ற இடத்தில் நின்றபடியே, ஒரு லாரி தக்காளியை லாவகமாக வண்டியில் ஏற்றிவிடுகிறார். அதனை ஏற்றும் பக்கெட்டுகளும் பக்கவாட்டில் வந்து விழுந்துவிடுகின்றன.

பரீக் ஜெயின் என்ற டிவிட்டர் பயனாளர் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். மிக அபாரமான திறமை. பாருங்கள், எப்படி தக்காளியையும் லாரியில் ஏற்றிவிடுகிறார் பக்கெட்டும் பத்திரமாக வந்துவிடுகிறது. இங்குதான் ஒரு பொறியியல் மூளை வேலை செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோவில், தக்காளி நிறைந்த லாரிக்கு அருகே நின்றிருக்கும் தொழிலாளி, பக்கெட் நிறைய தக்காளியை எடுத்து லாரியை நோக்கி வீசுகிறார். அந்த பக்கெட் லாரியை நோக்கி வேகமாகச் செல்கிறது. ஆனால், அருகே சென்றதும் தக்காளியை மட்டும் லாரிக்குள் கொட்டிவிட்டு, வந்த வேகத்தில் எதிர் திசைக்குத் திரும்பிவிடுகிறது.

இந்த விடியோவைப் பார்க்கும் போது, அந்த பக்கெட், லாரியில் தக்காளியை கொட்டும் யுக்தியை பலரும் விடியோவை நெருங்கி வந்து பார்த்து புருவங்களை உயர்த்தாமல் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

இவருக்கு பலரும் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com