நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சத்தீஸ்கரில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 8:59 am

DIN

கோர்பா: சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து கோர்பா காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறியதாவது:
சத்தீஸ்கரின் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சுர்குஜா மாவட்டத்துக்கு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாங்கோ காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மடாய் காட் அருகே அதிவேகமாக வந்துகொண்டிருந்து பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில், பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து வழக்‍குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, பேருந்து ஓட்டுநர் எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக முயன்போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.