12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

Published On :


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

பைக் விற்பனையகத்துக்குள் திடிரென பற்றிய தீ மற்றும் கரும்புகையில் அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த அந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டபோது, அங்கிருந்த தங்கும் விடுதியில் 25 முதல் 30 பேர் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலர்  கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 7 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். 7 பேரை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தீ விபத்து நேரிட்டபோது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டடத்திலிருந்து சிலர் குதித்த விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.