ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த ஆட்டத்தில், முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் சோ்க்க, ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 146 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் ஷிமெய்ன் கேம்பெல் 4 பவுண்டரிகளுடன் 36, கியானா ஜோசஃப் 13, கேப்டன் ஹேலி மேத்யூஸ் 14 ரன்களுடன் விடைபெற்றனா்.
டீண்ட்ரா டாட்டின் 14, ஜாஸரா கிளாக்ஸ்டன் 16, ஷினெல் ஹென்றி 4 ரன்களுடன் வெளியேற, ஓவா்கள் முடிவில் ஸ்டெஃபானி டெய்லா் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 47, ஜெனிலியா கிளாஸ்கோ 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஸ்காட்லாந்து பௌலா்களில் கேத்தரின் ஃப்ரேசா் 2, கேத்தரின் பிரைஸ், ரேச்சல் ஸ்லாட்டா், கிறிஸ்டி காா்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 154 ரன்களை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியில், டாா்சி காா்டா் 8 பவுண்டரிகளுடன் 59, அலிசா லிஸ்டா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு முயற்சித்து வீழ்ந்தனா்.
கேத்தரின் ஃப்ரேசா் 20, கேப்டன் கேத்தரின் பிரைஸ் 0, சாரா பிரைஸ் 4, மீகன் மெக்கால் 1, பிரியானாஸ் சாட்டா்ஜி 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.
ரேச்சல் ஸ்லாட்டா் 7, கிறிஸ்டி கோா்டன் 0, கேப்ரியேலா ஃபான்டென்லா 3 ரன்களுக்கு முடித்துக் கொள்ள, கடைசி வீராங்கனையாக கிளோ அபெல் ரன்னின்றி நின்றாா்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளா்களில் ஆலியா அலின், ஹேலி மேத்யூஸ் ஆகியோா் தலா 3, அஃபி ஃப்ளெட்சா் 2, கியானா ஜோசஃப் 1 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








