இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.
ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை வெல்ல, மற்ற இரண்டு போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 147/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 51, குசல் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்தார்கள். ஹோல்டர், ஷமேர் ஜோசப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
அடுத்து பேட்டிங் செய்த மே.இ.தீ. அணியினர் 19.2 ஓவர்களில் 149/3 ரன்கள் எடுத்து வென்றனர். இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 65 ரன்கள் எடுத்தார். கடைசியில் 20 பந்துகளுக்கு 20 ரன்கள் தேவையானபோது ரோமன் பவல் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பந்துவீச்சில் அசத்தில் ஜேசன் ஹோல்டருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரிலும் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.
The Home Town Hero Rovman Powell seals it in style!ð¥
— Windies Cricket (@windiescricket) June 12, 2026
Victory at Sabina Parkð¯ð² !ðªð¾ð pic.twitter.com/Ut69ziJtqX
Summary
West Indies beat Sri Lanka by seven wickets in opening T20 cricket match at Kingston, Jamaica
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மே.இ.தீவுகள்!

ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப் சதம்; 499 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்!

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!

ஒருநாள் போட்டி: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


