தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப் சதம்; 499 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 499 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

News image

சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஜஸ்டின் கிரீவ்ஸ் - படம் | AP

Updated On :7 ஜூலை 2026, 6:33 pm IST

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 499 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 549 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக லகிரு உதாரா 248 பந்துகளில் 188 ரன்கள் (21 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சோனல் தினுஷா 92 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 84 ரன்களும் எடுத்தனர். குசல் மெண்டிஸ் 69 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அல்சாரி ஜோசப், ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ராஸ்டன் சேஸ் மற்றும் காவெம் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப் சதம்!

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 549 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 499 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் சாய் ஹோப் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ரன்களும், சாய் ஹோப் 112 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஜான் கேம்பெல் 72 ரன்களும், காவெம் ஹாட்ஜ் 31 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும், மிலன் ரத்நாயகே மற்றும் சோனல் தினுஷா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை 142 ரன்கள் முன்னிலை!

முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 50 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷான் மதுஷங்கா 20 ரன்களும், லகிரு உதாரா 0 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் சண்டிமால் 40 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the first innings of the second Test match against Sri Lanka, the West Indies team was bowled out for 499 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.