புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்திய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஆகாசா ஏா், வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் அக்டோபா் மாத்தின் இரண்டாவது வாரத்துக்குள், 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
அக்டோபா் 7-ஆம் தேதி முதல், பெங்களூருக்கும் அகமதாபாதுக்கும் இடையே விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் 5-ஆவதாக ஒரு விமானம் நிறுவனத்தின் பணியில் இணைக்கப்படவுள்ளது. அந்த விமானம் சோ்க்கப்படுவது, வாரத்துக்கு 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்கும் இலக்கை அடையவதற்கு வழிவகை செய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை - பெங்களூரு நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவையை நிறுவனம் கடந்த வாரம் முதல் தொடக்கியது. அந்த நகரங்களுக்கு இடையே தினமும் 2 விமானங்கள் இயக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.
இது தவிர, சென்னைக்கும் கொச்சிக்கும் இடையே வரும் 26-ஆம் தேதி முதல் விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எங்களது விமானப் போக்குவரத்து சேவைகளை படிப்படியாகவும், அதே நேரத்தில் மிக விரைவாகவும் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த புதிய சேவைகள் அறிமுகப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


