காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங்கும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங்கும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மறுக்கும்பட்சத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அதுபோல, காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் களமிறங்குகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் சிங் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தலில் அசோக் கெலாட் அல்லது சசி தரூரா? என்று கேள்வி எழுப்பியதற்கு, 

'பார்க்கலாம். நான் என்னை போட்டியிலிருந்து இன்னும் விலக்கவில்லை, போட்டியில் என்னை ஏன் ஒதுக்கி வைக்க விரும்புகிறீர்கள்? யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், அனைவருக்கும் உரிமை உண்டு. செப். 30 ஆம் தேதி மாலை உங்களுக்குத் தெரியும்' என்று கூறியுள்ளார். 

இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 3-வது நபராக திக்விஜய் சிங்கும் போட்டியிட வாய்ப்புள்ளது தெரிகிறது.

ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து, 'கவலை இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதுபோல விருப்பமில்லாதவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தக் கூடாது' என்றார். 

திக்விஜய் சிங் இவ்வாறு கூறியுள்ளது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்த  பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com