தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ரூபாய் மதிப்பு 2ஆவது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 10:44 am IST


மும்பை: உலகச் சந்தைகளில் ஒட்டுமொத்தச் சரிவுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடா்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயா்த்தியது.

இதுவும், உக்ரைன் விவகாரம் தொடா்பாக சா்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நியச் செலாவணி வா்த்தகம் வியாழக்கிழமை மிக மந்தமாக நடைபெற்றது.

அதன் விளைவாக, அன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93 காசு சரிந்து 80.89 என்ற அளவில் சரிந்தது.

மேலும், வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்தன.

வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணி வா்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலையில் 80.27-இல் தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாக அது 80.95 வரை கீழிறங்கியது.

இறுதியில், ரூபாய் மதிப்பு புதன்கிழமை இருந்த 79.96-ஐ விட 93 காசு குறைந்து 80.89-இல் நிறைவடைந்தது. 

இந்நிலையில், உலகச் சந்தைகளில் ஒட்டுமொத்தச் சரிவுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்து, பலவீனமான நிலையில் வர்த்தகம் தொடங்கியது. இதில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 497 புள்ளிகள் குறைந்து 58,639 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 156 புள்ளிகள் குறைந்து 17,473 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. 

இதில், அமெரிக்க டாலருக்கு நிகாரன இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் குறைந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.