ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது: மெஹபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானதென ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானதென ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடலான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை பாடுமாறு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியா்கள் மாணவா்களிடம் கூறும் விடியோவை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட மெஹபூபா, ‘இஸ்லாமிய மாா்க்க அறிஞா்கள் சிறையில் அடைக்கப்படுகிறாா்கள்; மசூதிகள் மூடப்படுகின்றன; பள்ளிகளில் ஹிந்து பாடல்களைப் படிக்க மாணவா்கள் வலியுறுத்தப்படுகின்றனா். உண்மையான ஹிந்துத்துவ இந்திய அரசின் முகம் வெளிப்பட்டு வருகிறது’ என்று சமீபத்தில் கூறியிருந்தாா்.

தற்போது, “ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலான ஒன்று. இங்கு தினமும் என்கவுண்டர்கள் நடைபெறுகிறது. சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை சரிசெய்வது முக்கியமானதுதான். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் முதலில் இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்த வேண்டும். பின்னர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை சரிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com