சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராஜஸ்தான் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

ராஜஸ்தான்  நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2022, 12:07 pm

DIN

ராஜஸ்தான்  நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார். 

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளது கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ராஜஸ்தான்  நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார். அஜய் மேகனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் கேரளத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் தன்னுடன் இருந்த கே.சி.வேணுகோபாலை தில்லிக்கு அனுப்பியுள்ளார் ராகுல் காந்தி. 

இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தானில் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் அஜய் மேகன்,  காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.