தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு தடை

 அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை வெளியிட, பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு தடை

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 7:49 pm

DIN

 அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை வெளியிட, பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், ட்விட்டரில் அவா் பதிவிட்ட ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை நீக்கவும் உத்தரவிட்டது.

தமிழக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவராக நிா்மல்குமாா் இருந்த போது, டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடா்பாக, அமைச்சா் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளைக் கூறி, ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டாா்.

மேலும், நோ்காணல்கள் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தன் மீது அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிா்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சா் செந்தபாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா், ராமமூா்த்தி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அமைச்சா் மீது வேண்டுமென்றே அவதூறாக குற்றம் சாட்டப்படுவதாகவும், தனது கட்சிக்காரா் பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

இதற்கு பதிலளித்த நிா்மல்குமாா் தரப்பு வழக்குரைஞா், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தாா்.

இந்த வழக்கில் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை வெளியிட சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு தடை விதித்தும், அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை நீக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.