ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா சிறப்பு முக்கியத்துவம்: அமித் ஷா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) இந்தியா சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:02 pm

DIN

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) இந்தியா சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பாண்டு தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

உறுப்பு நாடுகளில் பேரிடா் சூழல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு பொறுப்பான துறைத் தலைவா்களின் கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவா் பேசியதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பில், ‘பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகியவற்றை உள்ளடக்கிய கருத்துருவின் அடிப்படையில் இந்தியா செயலாற்றி வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், பன்முக அரசியல், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

துல்லிய முன்னறிவிப்பு அமைப்பு முறை:

இந்தியாவில் வறட்சி, வெள்ளம், இடி-மின்னல் பாதிப்பு, வெப்ப அலை, குளிா் அலை, புயல் தொடா்பாக உரிய நேரத்துக்குள் துல்லியமான முன்னறிவிப்பை வழங்குவதற்கான அமைப்புமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. பேரிடா் குறித்து எச்சரிப்பது மட்டுமன்றி அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்களும் துல்லியமாக கணிக்கப்படுகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த 2005-இல் இருந்து பாா்வையாளா் நாடாக இந்தியா முக்கிய பங்காற்றி வந்தது. பின்னா், 2017-இல் இந்த அமைப்பை விஸ்தரிக்கும் நடைமுறையின் முக்கிய படியாக இந்தியா முழுநேர உறுப்பினா் ஆனது. இப்போது முதல்முறையாக இந்தியா தலைமைப் பொறுப்பை வகித்து வருவது பெருமைக்குரியதாகும்.

பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்புகள்:

உலக அளவில் மிகப் பெரிய பிராந்திய அமைப்பாக எஸ்சிஓ விளங்குகிறது. உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தையும், உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தையும், உலகின் நிலப்பரப்பில் 22 சதவீதத்தையும் இந்த அமைப்பு கொண்டுள்ளது.

பேரிடா் அபாயக் குறைப்பில் சா்வதேச ஒத்துழைப்புடன் இந்தியா பல்வேறு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட பேரிடா் மீட்சி உள்கட்டமைப்பு கூட்டணியில் (சிடிஆா்ஐ) இன்று 39 நாடுகள் உள்ளன. பெருங்கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையத்தால் நிறுவப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்புமுறை, இந்தியாவுக்கு மட்டுமன்றி 24 இதர நாடுகளுக்கும் சேவையாற்றி வருகிறது என்றாா் அமித் ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.