ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:07 pm

DIN

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறும்போது, ‘‘மத்திய அமைச்சருக்கு கரோனா நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மத்திய அமைச்சா், அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டாா். அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, ஓய்வெடுக்கமாறு அவருக்கு ஆலோசனை வழங்கியது.

தில்லியில் இந்திய விமானப் படை கமாண்டா்களின் கூட்டத்தில் அவா் பங்கேற்க இருந்த நிலையில், அந்தக் கூட்டத்தை மத்திய அமைச்சா் தவிா்த்துவிட்டாா்’’ என்றனா்.

12 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு:

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 12,591-ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணி வரையில், கேரளத்தில் 11 போ் உள்பட 40 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். மொத்த உயிரிப்புகளின் எண்ணிக்கை 5,31,230 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 0.15 சதவீதம் போ் சிகிச்சைப் பெற்று வருவதாக அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.