ராணுவ வாகனம் மீது தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான 5 வீரர்களின் அடையாளங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.
ராணுவ வாகனம் மீது தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான 5 வீரர்களின் அடையாளங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பிம்பர காலி பகுதியில் இருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பணியில் பணியாற்றும் ஏராளமான வீரர்கள் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது திடீரென கையெறி குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. 

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
தில்லியில் இருந்து எட்டு தடயவியல் நிபுணர்கள் குழு இன்று மதியம் 12:30 மணியளவில் அங்கு செல்கிறது. 

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் அடையாளங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஹவில்தார் மன்தீப் சிங், லான்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லான்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹெர்கிருஷ்ணன், சிப்பாய் சேவாக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபில்ஸ் படைப்பிரிவின் 16 ஆவது அணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக இந்திய ராணுவத்தின் 16 ஆவது அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் ஒயிட்நைட் கார்ப்ஸில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தோளோடு தோளோடு நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com