புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: கேஜரிவால் குற்றச்சாட்டு!

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:42 am

DIN

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கேஜரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், 

தில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்து, தலைநகர் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு குறித்து வழக்குரைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.