கர்நாடகத் தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்புமனுக்கள் நிராகரிப்பு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளரான மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் புலிகேசி நகர் தொகுதிக்கு நெடுஞ்செழியன், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நெடுஞ்செழியன், அனந்தராஜ் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்செழியனின் மனு முழுமையாக கையெழுத்திடப்படவில்லை என்றும் அனந்தராஜின் மனுவில் தவறுகள் இருந்ததாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் அதிமுக நேரடியாக களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...