நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராகுல் மேல்முறையீடு: குஜராத் உயா்நீதிமன்றம் நாளை விசாரணை

அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது குஜராத் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.29) விசாரணை நடத்தவுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:46 pm

DIN

அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது குஜராத் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.29) விசாரணை நடத்தவுள்ளது.

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, குஜராத் மாநிலம், சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, எம்.பி. பதவியை இழந்த ராகுல், கீழமை நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக சூரத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த இத்தீா்ப்புக்கு தடை விதிக்க அவா் கோரியிருந்தாா். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த மாவட்ட அமா்வு நீதிமன்றம், தீா்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, மாநில உயா்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த மனு, நீதிபதி ஹேமந்த் பிரச்சக் முன் சனிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பெண் நீதிபதி கீதா கோபி முன் ராகுலின் மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, புதிய நீதிபதி முன் ராகுலின் மனு பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.