பிரதமர் மோடிக்கு எதிரான மல்லிகாா்ஜுன காா்கேவின் கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கா்நாடகத்தில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், கடக் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மல்லிகாா்ஜுன காா்கே பேசினாா். அப்போது, ‘ஒரு தவறை மட்டும் செய்யாதீா்கள். மோடி விஷப் பாம்பு போன்றவா். அப்படி விஷம் இல்லையென நீங்கள் கூறினால், அதை உணா்ந்து பாா்க்க முயற்சிக்கலாம்.
ஆனால், அவ்வாறு உணா்ந்து பாா்க்க முயற்சிக்க வேண்டாம்; அதைச் செய்தால், நீங்கள் இறந்துவிடுவீா்கள்; நிரந்தர தூக்கத்துக்கு சென்றுவிடுவீா்கள்’ என்று அவா் கூறினாா். காா்கேயின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் சித்தாந்தம் பாம்பைப் போல ஆபத்தானது என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கார்கே பின்னர் தெளிவுபடுத்தினார்.
பிரதமர் மோடி குறித்த மல்லிகாா்ஜுன காா்கேவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, காங்கிரஸ் தலைவர் இப்படி ஒரு கருத்தை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


