ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியா கூட்டணி நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றும்: மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று  இந்தியா கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2023, 12:13 pm

DIN

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று  இந்தியா கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக மின்னணு வாக்கு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மாநில தலைமைச் செயலகத்துக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அரசை அமைக்கும். இந்தியா கூட்டணி  நாட்டை வகுப்புவாத பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அவர்கள் ஏற்கனவே திட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். மின்னணு வாக்கு இயந்திரங்களை அவர்கள் தவறாகப் பயன்படுத்த  முயற்சி செய்வார்கள். அவர்களது முயற்சி குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற பல செயல்களில் அவர்கள் ஈடுபடுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.