ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாசிச சக்திகளின் கீழ், நாட்டில் ஒரு கவலையான போக்கு உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு அவதூறு வழக்குகளில் கூட இரண்டு ஆண்டுகள் முழுத் தண்டனை பெற்ற முதல் நபர் ராகுல் காந்திதான். இன்று, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இப்போது எல்லாம் சரியான திசையில் செல்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்’’ என்றார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
மேலும் எதன் அடிப்படையில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் மூலமாக ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் தொடர்வார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!

செய்யறிவு உதவிக்காகவே தவிர நீதித்துறை நெறிமுறையை மாற்ற இயலாது: உச்ச நீதிமன்ற நீதிபதி!

ஒன்ஸ் மோர் வெளியீடு பற்றிய தகவல்!
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

