நீதி வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
நீதி வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீதி வெல்லும்! வயநாடு தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி. 

அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.

இந்த முடிவு நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com