விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்! 

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 7:04 am

DIN

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள் இன்று. எனவே, நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கிய நிலையில்,  இதுவரை 4.15 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். குகைக் கோயிலுக்குச் செல்லும் புனித பயணம் ஆகஸ்ட் 1-ம் தேதியோடு நிறைவடைகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.