மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, வாகன ஓட்டுநா் உரிமம், ஆதாா், திருமணப் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த வகை செய்யும் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோ

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 7:52 pm

DIN

கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, வாகன ஓட்டுநா் உரிமம், ஆதாா், திருமணப் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த வகை செய்யும் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தாக்கல் செய்த இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவையில் இந்த மசோதா கடந்த ஆக.1-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

பிறப்பு-இறப்புகளை எண்ம முறையில் பதிவுசெய்து, அதற்கான சான்றிதழ்களை இணைய வழியில் பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த மசோதா மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிறப்பு-இறப்பு பதிவுக்கான தரவுதளத்தைத் தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில் உருவாக்கி, அவற்றை குறிப்பிட்ட காலஅளவில் புதுப்பிக்கவும், பொதுச் சேவைகள், சமூகநல திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.