நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) விவாதம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மணிப்பூர் விவாகரத்தை முன்வைத்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு (பாஜகவுக்கு ஆதரவு) தெரிவித்துள்ளது.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்ததால் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அதை எதிர்க்கிறது என்று அக்கட்சியின் எம்.பி. பினாகி மிஸ்ரா கூறியுள்ளார்.
பிஜேடி அரசியல் ரீதியாக பிஜேபிக்கு எதிரானது என்று நினைத்தாலும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்களால் ஆதரிக்க முடியாது. ஒடிசாவுக்கு மத்திய அரசு செய்த பல விஷயங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்கக் கோரி பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கிடம் பேசியதாகவும் அதற்கு பட்நாயக் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க | நம்பிக்கையில்லா தீர்மானம்: பாஜக அரசுக்கு நவீன் பட்நாயக் ஆதரவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

