33 ஆண்டுகளுக்குப் பின்.. ஜம்மு-காஷ்மீர் நீதிபதி கொலையில் மறுவிசாரணை

மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நீல்கந்த் கஞ்ஜூ வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளால், 33 ஆண்டுகளுக்கு முன்பு, சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நீல்கந்த் கஞ்ஜூ வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளனர்.

ஜேகேஎல்எஃப் நிறுவனர் மொகம்மது மக்பூர் பத் என்ற பயங்கரவாதிக்கு 1968ஆம் ஆண்டு, மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீலக்ந்த் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த நிலையில், 1989ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ஸ்ரீநகரில் ஓய்வுபெற்ற நீதிபதி நீல்கந்த் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளிகள் தொடர்பாக மறுவிசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் தகவல்கள் தெரிந்த மற்றும் கொலையாளிகள் பற்றிய துப்பு தெரிந்தவர்கள், தகவல்களை காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஜம்மு-காஷ்மீரில் உயர் பதவியில் இருந்தவர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கும் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com