/

பாகிஸ்தானில் சாலை விபத்து: 8 பேர் பலி, 10 பேர் காயம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:01 am

DIN

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

லாகூரில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னுவில் இருந்து பாக்கருக்கு பயணிகள் வேன் சென்றுகொண்டிருந்த போது எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றொரு வாகனம் வேகமாக மோதியது. 

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் மாநிலத்தின் தற்காலிக முதல்வர் மொஹ்சின் நக்வி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.