பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணிப்பூரை விட்டுவிட்டு மற்ற மாநில பிரசாரங்களில் தீவிரம் காட்டும் பாஜக: கார்கே

மணிப்பூர் பற்றி எரியும்போது மற்ற மாநிலங்களில் பாஜக கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2023, 10:54 am

DIN

மணிப்பூர் பற்றி எரியும்போது மற்ற மாநிலங்களில் பாஜக கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

தல்கடோரா அரங்கில் மகிளா காங்கிரஸ் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, 

கட்சியின் பெண் தலைவர்கள் கடுமையாக உழைத்து 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை ஒழித்துக்கட்டுவோம். ராகுல் காந்தியால் மணிப்பூர் செல்ல முடியும் என்றால், பிரதமர் மோடியால் ஏன் அங்கு செல்ல முடியாது? 
மணிப்பூர் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அங்குள்ள பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பு அளித்துள்ளது? 

ஆனால் இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மற்ற மாநிலங்களில் பாஜக பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான யோசனைகள் மற்றும் உத்திகள் குறித்து எங்கள் கட்சியின் மகளிர் குழுவினர் விவாதிப்பார்கள். அடுத்தாண்டு அவர்கள் பாஜக அரசை ஒழித்துக் கட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். 

மணிப்பூரில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்துப் பேசுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம், ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பின்னரே அவர் பேசினார்.

மணிப்பூரில் பல உயிர்கள் பலியாகின, பல வீடுகள் எரிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர், ஆனால் பிரதமர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை என கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.