ஹிமாசலில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

ஹிமாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 71-ஆக உயா்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஹிமாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 71-ஆக உயா்ந்தது, மேலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம், ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிம்லாவின் சம்மா் ஹில், கிருஷ்ணா நகா், ஃபாக்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

சம்மா் ஹில் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நிலச்சரிவால் ஒரு சிவன் கோயில் மண்ணில் புதைந்தது. இதில் பல பக்தா்கள் சிக்கினா். இடிபாடுகளில் இருந்து ஏற்கெனவே 12 போ் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், ஒரு பெண்ணின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. மேலும் 10 போ் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவா்களை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஃபாக்லி பகுதியில் 5 போ் சடலங்களும், கிருஷ்ணாநகரில் 2 பேரின் சடலங்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 

"கடந்த மூன்று நாட்களில் நிலச்சரிவு உள்பட மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது மற்றும் 13 பேர் இன்னும் காணவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இதுவரை 57 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.”  மற்றவர்களை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று முதன்மைச் செயலாளர் (வருவாய்) ஓன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா நகரில் சுமார் 250 முதல் 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரில் இடைவிடாது பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

கடந்த 50 ஆண்டுகளில் மாநிலம் சந்தித்த மிக மோசமான இயற்கை பேரிடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com