கர்நாடகத்தில் டிஆர்டிஓ ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து!

இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆளில்லா விமானம் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஒரு கிராமத்தின் அருகே விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.
கர்நாடகத்தில் டிஆர்டிஓ ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து!
Updated on
1 min read

சித்ரதுர்கா (கர்நாடகா): இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆளில்லா விமானம் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஒரு கிராமத்தின் அருகே விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்டவில்லை.

"கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிஆர்டிஓ உருவாக்கிய "தபஸ் ட்ரோன்" ஆளில்லா விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது" என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு டிஆர்டிஓ விளக்கம் அளித்துள்ளது, மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆளில்லா விமானம் விவசாயம் நிலத்தில் விழுந்து நொறுங்கிய தகவல் பரவியதை அடுத்து, உள்ளூர் கிராம மக்கள் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதை பார்க்க விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர்.

இதையடுத்து விமானத்தின் சிதைந்த பாகங்களை யாரும் எடுக்காமல் இருப்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வான்வழி கண்காணிப்புக்கான தபஸ் பிஎச்-201 என்பது ஒரு நீடித்து உழைக்கக்கூடிய ஆளில்லா விமானம், இது இதற்கு முன்பு ரஸ்டம்-II என குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com