

மத்தியப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக மத்தியப் பிரதேசத்தின் போபாலில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போபால் வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அடுத்த 2-3 நாள்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பச்மார்கியில் 66 மீமீ மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.