திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மாநிலங்களவையில் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் பதவியேற்பு!

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2023, 4:57 pm IST

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில், அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் 9 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். இவர் இரண்டாவது முறையாக மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2019-ல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாபுபாய், ஜெய்சங்பாய் தேசாய்(குஜராத்), கேஸ்ரிதேவ்சிங் திக்விஜய் சிங் ஜாலா(குஜராத்) நாகேந்திர ராய்(மேற்கு வங்கம்) ஆகியோரும், 

திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களான டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர், பிரகாஷ் சிக் பராய்க் மற்றும் சமிருல் இஸ்லாம் ஆகியோரும் பதவியேற்றனர். 

ஓ-பிரையன், சென் மற்றும் ரே ஆகியோர் பெங்காலி மொழியில் பதவியேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.