சந்திரயான் 3: திட்டமிட்டபடி நாளை லேண்டர் தரையிறங்கும்!
சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நாளை திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.


சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நாளை திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.
மேலும், சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் சந்திரயான் -3 லேண்டருடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
“சந்திரயான் திட்டமிட்டபடி செயல்பட்டு வருகின்றது. லேண்டர் அனுப்பிய புகைப்படங்கள் நிலவில் தரையிறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். நாளை மாலை 5.20 மணிக்கு நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் நேரலை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம் உலக நாடுகளிடையேயும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...