சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து இந்தியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.
சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னா் இன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.
பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
சந்திரயான்-3 வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதுபோல தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் சந்திரயான்-3 வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் அதிகாரிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

குமாரபாளையம் ஜவுளி பூங்காவில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் பொருள்கள் சேதம்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் அடிப்படை வசதிகள்: அமைச்சா் உறுதி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



