வாக்கு விகிதம் அதிகரிக்குமா? தேர்தல் ஆணைய தூதரானார் சச்சின்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஆவணங்களில் சச்சின் டெண்டுல்கள் கையெழுத்திட்டார். 
வாக்கு விகிதம் அதிகரிக்குமா? தேர்தல் ஆணைய தூதரானார் சச்சின்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஆவணங்களில் சச்சின் டெண்டுல்கள் கையெழுத்திட்டார். 

இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் செயல்படவுள்ளார். 

அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சச்சின் பங்கேற்கவுள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள நகா்ப்புற மக்கள் மற்றும் இளைஞா்கள் வாக்களிப்பதில் காட்டும் அக்கறையின்மையைக் களையும் நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சச்சின் டெண்டுல்கரை தூதராக நியமித்துள்ளது. 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தில்லியில் இன்று (ஆக. 23) நடை பெற்றது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அருண் கோயல், அனூப் சந்திர பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் தூதராக நியமிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில், ஒப்பந்தத்தில் சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டார். 

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சச்சின், உலகில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. நமது வாக்குரிமையை உறுதி செய்வது குடிமக்களின் கடமை எனக் குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதி இந்திய தேர்தல் ஆணைய தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com