தில்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்து தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் துணை இயக்குநராக இருந்த பிரமோதய் காக்கா(Premoday Khakha), இறந்த தனது நண்பரின் மகளை 2020-21 ஆம் ஆண்டில் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்புக்கான மாத்திரைகளை அவரது மனைவி வழங்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிரமோதய் காக்கா, மனைவி சீமா ராணி ஆகிய இருவரையும் கடந்த திங்கள்கிழமை போலீசார் கைது செய்த நிலையில் இன்று(புதன்கிழமை) தில்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவருக்கும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் விசாரணை முடிவடையும்வரை, குற்றம்சாட்டப்பட்ட பிரமோதய் காக்காவை இடைநீக்கம் செய்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

