வாட்ஸ்ஆப் குழு: புதிய வசதி அறிமுகம்!

பெயரில்லாமல் வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
வாட்ஸ்ஆப் குழு: புதிய வசதி அறிமுகம்!

பெயரில்லாமல் வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுமையான அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா நிறுவனம்.

அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் குழு உருவாக்குவது தொடர்பாக புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவை உருவாக்க வேண்டுமென்றால் குழுவுக்கு ஒரு பெயர் என கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதன்பின்னரே குழு உருவாகும். 

ஆனால், வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது அப்டேட் செய்துள்ளதன்படி குழுவை உருவாக்கும்போது அதற்கு பெயர் குறிப்பிடத் தேவையில்லை. 

இதன்படி நீங்கள் யாரையெல்லாம் குழுவில் சேர்க்கிறீர்களோ அவர்களது எண்கள் உங்கள் போனில் என்ன பெயரில் சேமிக்கப்பட்டுள்ளதோ அந்த பெயர்கள் தோன்றும். உதாரணமாக ஏ, பி & சி என்று இருக்கும். குழுவில் உள்ளவர்களுக்கு அவர்களின் போனில் உங்கள் பெயர் என்னவோ அந்த பெயர் தெரியும். பெயர் இல்லாத இதுபோன்ற குழுவில் 6 பேரை மட்டுமே இணைக்க முடியும். 

அவசரமாக ஒரு குழுவை உருவாக்கும்போது பயனர்களுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் பல நாடுகளில் அப்டேட் ஆகியுள்ள இந்த அம்சம் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்று மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com