ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது: லாலு பிரசாத் யாதவ்

பிகாரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.  
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது: லாலு பிரசாத் யாதவ்

பிகாரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மனோஜ் மிட்டா எழுதிய சாதி பெருமை என்ற புத்தகத்தை ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புணர்ச்சியுடன் பார்க்கிறது. 

ஒருவரின் ஜாதி மற்றும் பொருளாதார நிலை குறித்து தெரியாமல் எப்படி கொள்கைகளை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஜனவரியில் பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. இந்தக் கணக்கெடுப்பின் உள்நோக்கம் உள்ளிட்டவை தொடா்பாக கேள்வி எழுப்பி, அதற்கு எதிராக அந்த மாநிலத்தில் உள்ள பாட்னா உயா் நீதிமன்றத்தில் பலா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா் நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க மறுத்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா். ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையாக ஆட்சேபத்துக்குரியது என மனுதாரா்கள் சுட்டிக்காட்டாத வரை, அந்தப் பணிக்கு தடை விதிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com