நடுவானில் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்

விமானத்தில் நடுவானில் மூச்சு நின்றுபோன குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நடுவானில் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்

விமானத்தில் நடுவானில் மூச்சு நின்றுபோன குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் வந்த குழந்தைக்கு திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது.

விஸ்தாரா விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அதற்குள், பெங்களூருவில் இருந்து, தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்ததால், அவர்கள் குழந்தைக்கு நடுவானில் உயிர் காக்கும் சிகிச்சை அளித்தனர்.

இதய பிரச்னைக்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தை, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஞாயிற்றுக்கிழமை மாலை மயக்கமுற்று மூச்சுவிடுவது நின்றுபோனது.

அதே விமானத்தில் இருந்த ஐந்து மருத்துவர்களும் குழந்தையின் நாடித்துடிப்பை பரிசோதித்தபோது, மிக மோசமாக இருந்ததால், குழந்தைக்கு சிபிஆர் செய்யப்பட்டு, உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோதே இருந்த குறைவான மருத்துவக் கருவிகளைக் கொண்டு குழந்தையின் உயிர் காக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து குழந்தை வெளியே கொண்டுவரப்பட்டு மருத்துவ நிபுணர்களிடம் சேர்க்கப்பட்டது. 

இந்த தகவலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com