மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இந்தியா கூட்டணியின் இலச்சினை: ஆக. 31-ல் வெளியீடு!

இந்தியா கூட்டணியின் இலச்சினை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் அறிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 2:37 pm


இந்தியா கூட்டணியின் இலச்சினை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் அறிவித்துள்ளார்.

மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இதில் இந்தியா கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் நானோ படோல், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முழு வீச்சில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டம் உலகத்திற்கு மிகப்பெரிய செய்தியை அறிவிக்கும். இந்தியா கூட்டணியின் இலச்சினை குறித்த அறிவிப்பும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.