நிலவை ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும்!

நிலவை ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஹிந்து மகாசபையின் தலைவர் சக்ரபாணி மகாராஜ் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய ஹிந்து மகாசபையின் தலைவர் சக்ரபாணி மகாராஜ்
அனைத்திந்திய ஹிந்து மகாசபையின் தலைவர் சக்ரபாணி மகாராஜ்

நிலவை ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஹிந்து மகாசபையின் தலைவர் சக்ரபாணி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3-இல் அனுப்பப்பட்ட லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவ சக்தி’ என்றும், சந்திரயான் 2-ல் அனுப்பப்பட்ட லேண்டர் கீழே விழுந்து நொறுங்கிய பகுதிக்கு ‘திரங்கா’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பெயர் சூட்டினார்.

நிலவில் உள்ள பகுதிக்கு பிரதமர் மோடி ‘சிவ சக்தி’ என்று ஹிந்து கடவுளின் பெயரை சூட்டியதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டத்தை பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே, ஹிந்து மகாசபையின் தலைவர் எக்ஸ்(டிவிட்டர்) வாயிலாக வெளியிட்ட காணொலியில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த காணொலியில், “நிலவை ஹிந்து ராஷ்டிரமாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும். சந்திரயான் 3 தரையிறங்கிய ‘சிவசக்தி’ புள்ளியை தலைநகராக உருவாக்க வேண்டும்.  அப்போதுதான், ஜிகாதி மனநிலையுடன் உள்ள பயங்கரவாதிகள் அங்கு செல்ல முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

சக்ரபாணி மகாராஜின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரோ கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவரும் நிலவின் மேற்பகுதியில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதற்கு உலக நாடுகள் பல பாராட்டுகளைத் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com