ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து நீட்டா அம்பானி விலகுகிறார். அதேநேரத்தில் அம்பானியின் வாரிசுகளுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திரக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாகக் குழு கூட்டத்தில் இருந்து நீட்டா அம்பானி விலகுகிறார். அதேநேரத்தில் நிரந்தர உறுப்பினராக அவர் நிர்வாகக் குழு கூட்டங்களில் கலந்துகொள்வார். நீட்டா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டா அம்பானிக்கு பதிலாக முகேஷ் - நீட்டா அம்பானியின் வாரிசுகளான இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவின் இயக்குநர்களாக(Non-executive directors) நியமிக்கப்படுகின்றனர்.
முன்னதாக, ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடைல் தலைவராகவும் ஆனந்த் அம்பானி டிஜிட்டல் மற்றும் எனர்ஜி பிரிவின் தலைவராக இருக்கிறார்.