என்ன, காற்று மாசுபாட்டால் சீக்கிரமே இறந்துவிடுவோமா?

காற்று மாசுபாடு காரணமாக, இந்தியர்களின் வாழ்நாள் எதிர்பார்க்கப்பட்டதைவிட, சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
என்ன, காற்று மாசுபாட்டால் சீக்கிரமே இறந்துவிடுவோமா?


புது தில்லி: காற்று மாசுபாடு காரணமாக, இந்தியர்களின் வாழ்நாள் எதிர்பார்க்கப்பட்டதைவிட, சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

உலகிலேயே காற்று மாசுபாட்டுக்குப் பெயர் போன நகரமாக விளங்கும் நமது தலைநகரம் புது தில்லியில் இருப்பவர்களின் சராசரி வாழ்நாள் 11.9 ஆண்டுகள் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளுடன் ஒப்பிட்டு, ​​சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை மையத்தால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடின் (AQLI) என்பது, ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட தரத்துக்கு இந்தியாவின் காற்று மாசு சீரடையாவிட்டால், சராசரியாக, இந்தியர்களின் வாழ்நாள் 1.8 ஆண்டுகள் குறையும் என்றும், தில்லி வாழ் மக்களின் வாழ்நாள் 8.5 ஆண்டுகள் குறையும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கும் காற்றுத் தரத்துக்குக் கீழே காற்று மாசால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நாட்டில் 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்றும், நாட்டின் காற்றின் தர நிர்ணய அளவை விடக் குறைவான பகுதிகளில் 67.4 சதவிதம க்கள் வசிக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு காற்று மாசு ஏற்படுத்தும் தீங்கானது, புகைப்பிடித்தலை விடவும் மோசமானது என்றும், மதுக் குடித்தல் மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதை விட 3 மடங்கும், விபத்துகளில் பலியாகும் எண்ணிக்கையை விட 5 மடங்கும், எய்ட்ஸ் போன்ற நோய்களில் பலியாவதைவிட 7 மடங்கும் அதிகமாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com