தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜி20 மாநாடு: தில்லி விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களில் தில்லி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், சற்று முன்னதாக வீட்டிலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஆகஸ்ட் 2023, 12:32 pm

DIN


புது தில்லி: ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களில் தில்லி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், சற்று முன்னதாக வீட்டிலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஜி20 மாநாடு நடைபெறவிருக்கிறது.  எனவே, முக்கிய தலைவர்கள் பலரும் செப்டம்பர் 8ஆம் தேதியே தில்லிக்கு வருகை தரத் தொடங்குவார்கள். 

இந்த நிலையில், தில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச  விமான நிலையம் தரப்பில் பொதுமக்களுக்கு ஒருஅறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் முக்கியத் தலைவர்களுக்கு வெளியேற விமான நிலையத்தில் தனி வழி அமைக்கப்படும். எனவே, விமான நிலையத்தில் பெரிய அளவில் சிக்கல் ஏதும் நேரிடாது. ஆனால், முக்கியத்தலைவர்களின் வருகை காரணமாக தில்லி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் விமான நிலையத்துக்குள் பலத்த பாதுகாப்பு, சோதனை நடைபெறும் என்பதால் அதற்கேற்ற வகையில் விமான நிலையத்துக்கு வருவதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி விமானங்களில் முக்கிய தலைவர்களின் வருகையின்போது, சில நேரங்களில் விமானம் புறப்படுவது, தரையிறக்கம் தடைபடலாம். எனவே, தில்லி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், தங்களது விமானம் புறப்படும் நேரம் குறித்து அவரவர் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.