ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 %

நாட்டின் மொத்த உள்நாட்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதிகபட்சமாக 7.8 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 %


புதுதில்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதிகபட்சமாக 7.8 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்துள்ளதாகவும், விவசாயம் மற்றும் நிதித் துறைகளின் சிறந்த செயல்திறன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. 

2022-23 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவிகிதமாகவும், ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.1 சதவிகிதமாகவும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 13.1 சதவிகிதமாகவும் இருந்தது. 

ஏப்ரல்-ஜூன் 2023 இல் சீனா 6.3 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்ததால், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருந்தது.

தேசிய புள்ளியியல் அலுவலக  தரவுகளின்படி, விவசாயத் துறையின் மொத்த மதிப்பு கூட்டல் (ஜிவிஏ) 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2.4 சதவிகிதத்தில் இருந்து 3.5 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

'நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகளின்' ஜிவிஏ விரிவாக்கம் 12.2 சதவிகிதமாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் காலாண்டில் 8.5 சதவிகிதமாக இருந்தது.

இருப்பினும், உற்பத்தித் துறையில் ஜிவிஏ, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டு 6.1 சதவிகிதமாக இருந்தது.

2022-23 ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி 6.1 சதவிகிதமாகவும், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் இருந்தது.

"உண்மையான ஜிடிபி அல்லது ஜிடிபி நிலையான (2011-12) விலையில் 2023-24 காலாண்டில் ரூ.40.37 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 காலாண்டில் ரூ.37.44 லட்சம் கோடியாக இருந்தது. இது 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டின் 13.1 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 7.8 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகிறது என்று  தேசிய புள்ளியியல் அலுவலக தரவு அறிக்கை தெரிவிக்கின்றன. 

2023-24 முதல் காலாண்டில் தற்போதைய விலையில் பெயரளவிலான ஜிடிபி ரூ.70.67 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 முதல் காலாண்டை  விட ரூ.65.42 லட்சம் கோடியாகவும் 27.7 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 8 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகிறது.

தரவுகளின்படி, 'சுரங்கம் மற்றும் குவாரிகளில்' உற்பத்தி (ஜிவிஏ) முதல் காலாண்டில் 9.5 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது, 'மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகள்' 14.9 சதவிகிதத்திலிருந்து 2.9 சதவிகிதமாக குறைந்துள்ளது மற்றும் 'கட்டுமானம்' 16 சதவிகிதத்திலிருந்து 7.9 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com