அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? ராகுல் கேள்வி
அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


மும்பை: அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், சோனியா மற்றும் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
அப்போது பேசிய அவர், அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. மேலும், முறைகேடு தொடர்பாக ஓசிசிஆர்பி முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய தொழில் நிறுவனங்கள் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதானி குழும முறைகேடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.
அதானி குழும முறைகேடுகளில் வினோத் அதானி மட்டுமல்லாமல், சீனாவைச் சேர்ந்த சாங் சுங் லிங்க் மற்றும் நாசர் அலி என்ற இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேடாக செய்யப்பட்ட முதலீடுகள் மூலம், அதானி குழும பங்குகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சீனாவைச் சேர்ந்தவர்களின் முதலீட்டை, நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தில் ஏற்றுக்கொண்டது எப்படி? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...